திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் 73 மாணவ-மாணவிகளுக்கு ரூ.3 கோடி கல்விக்கடன் பெறுவதற்கான உத்தரவை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் வழங்கினார்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் 73 மாணவ-மாணவிகளுக்கு ரூ.3 கோடி கல்விக்கடன் பெறுவதற்கான உத்தரவை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் வழங்கினார்.
x

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் 73 மாணவ-மாணவிகளுக்கு ரூ.3 கோடி கல்விக்கடன் பெறுவதற்கான உத்தரவை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் வழங்கினார்.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் 73 மாணவ-மாணவிகளுக்கு ரூ.3 கோடி கல்விக்கடன் பெறுவதற்கான உத்தரவை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் வழங்கினார்.

ஆய்வுக்கூட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலாளரும், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான கருணாகரன் தலைமையில் நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்தறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட தொழில் மையம், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடந்தது. வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.

73 மாணவர்களுக்கு கடன் உத்தரவு

முன்னதாக கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பங்கேற்றார். கல்விக்கடன், தொழில்கடன், தாட்கோ கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்கடன் ஆகியவை வழங்குவதற்கான உத்தரவை அவர் வழங்கினார். மொத்தம் 73 மாணவ-மாணவிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பில் கல்விக்கடனுக்கான உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டது. மேலும் தாட்கோ திட்டத்தில் 5 பேருக்கு ரூ.20 லட்சம் கடன், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சம் கடன் உத்தரவு ஆணை வழங்கப்பட்டது. 2 நாட்கள் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் மொத்தம் 165 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, துணை போலீஸ் சூப்பிண்டு சவுமியா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மதுமதி, சமூக நல அதிகாரி அம்பிகா, முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story