கல்வி கொள்கை குழு கலந்துரையாடல் கூட்டம்


கல்வி கொள்கை குழு கலந்துரையாடல் கூட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:33+05:30)

ஆக்கூரில் கல்வி கொள்கை குழு கலந்துரையாடல் கூட்டம்

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

தமிழ்நாடு அரசு மாநில அளவிலான கல்வி கொள்கையை வரையறுப்பதற்காக தனி சட்டம் இயற்றி புதிய கல்வி கொள்கை வரையறை குழுவை ஏற்படுத்தியது. இந்த குழுவானது பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்டு வருகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு கல்வி கொள்கை குழு சார்பில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு புதிய கல்வி கொள்கை வரையறை ஒருங்கிணைப்பாளர் ஜவகர் நேசன் தலைமையிலான குழுவினர் பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். பின்னர் ஆசிரியர்களை பாடம் நடத்த சொல்லி மாணவ, மாணவிகளிடம் கேள்வி கேட்டு ஆய்வு செய்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுடையநம்பி, மாவட்ட கல்வி அலுவலர்கள் அனுசியா, பார்த்தசாரதி, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story