இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே வண்டுவாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் தலைமை தாங்கினார். ஆசிரியர் இந்திரசித்தன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் வேதாரண்யம் ஒன்றிய இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் அரசமணி கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் எவ்வாறு படிக்க வேண்டும்? மாணவர்களுக்க புரியும் விதததில் பாடம் நடத்துவது எப்படி? என்பது பற்றி விளக்கம் அளித்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story