மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
குன்னூர்
குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தாங்கள் படித்த பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பரிசுகள் வழங்க முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு பழங்கள், இனிப்புகள் மற்றும் கல்விக்கு தேவையான உபகரணங்களை முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜெபரத்தினம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர் கமல்குமார், முன்னாள் மாணவர் சங்க செயலாளர் யாகத் அலி, நகர மன்ற கவுன்சிலர் மன்சூர், லட்சுமி நாராயணன், ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.