மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
செங்கோட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்பொய்யாமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளா் சிவபத்மநாதன் ஆலோசனையின்படி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு 12-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் இசக்கிதுரைபாண்டியன் (எ) ராஜா தலைமை தாங்கி தனது சொந்த நிதியில் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுதுபொருட்கள், இனிப்புகள் வழங்கினார். தலைமை ஆசிரியா் நாதன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், சமூக ஆர்வலா்கள் வெல்டிங் சங்கர், விஜி, நாராயணன், அஜய், ஹரி, நீராத்துலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Related Tags :
Next Story