ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி
கல்லிடைக்குறிச்சியில் ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவியை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்
திருநெல்வேலி
அம்பை:
அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது தேர்தல் வாக்குறுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் சம்பள பணத்தை ஏழை-எளிய மாணவர்களின் படிப்பிற்கு அளிப்பேன் என்று உறுதி அளித்தார். அதன்படி கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் ஏழை, எளிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் 8 பேருக்கு ரூ.50 ஆயிரத்திற்கான கல்வி நிதி உதவியை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார். அப்போது, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, மின்னல் மீனாட்சி, பார்வதி பாக்கியம் சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிசெல்வம், கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் முத்துகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் ராகவன், மணிமுத்தாறு முன்னாள் சேர்மன் சிவன் பாபு, அம்பை நகர செயலாளர் அறிவழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story