முட்டை விலை 5 காசுகள் உயர்வு


முட்டை விலை 5 காசுகள் உயர்வு
x

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது.

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக உயர்ந்து உள்ளது. இதேபோல் ஏற்றுமதி ரக முட்டையின் கொள்முதல் விலை 455 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் முட்டைக்கோழி கிலோ ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.91 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.108 ஆக அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story