நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்ந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து, 420 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
முட்டை விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 400 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலை 20 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனால் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக அதிகரித்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
கறிக்கோழி
சென்னை-425, ஐதராபாத்-385, விஜயவாடா-402, மைசூரு-405, மும்பை-430, பெங்களூரு-405, கொல்கத்தா-475, டெல்லி-408.
ஆடிபெருக்கு விழா முடிவடைந்ததால் தமிழகத்தில் முட்டை நுகர்வு அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் முட்டை உற்பத்தி சற்று குறைந்து உள்ளது. இதுவே முட்டை கொள்முதல் விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
கறிக்கோழி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.8 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.88 ஆக அதிகரித்து உள்ளது.
முட்டைக்கோழி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.95 ஆக அதிகரித்து உள்ளது.