முட்டைகளை வேக வைக்காமல் சாப்பிடக்கூடாது


முட்டைகளை வேக வைக்காமல் சாப்பிடக்கூடாது
x

முட்டைகளை வேக வைக்காமல் சாப்பிடக்கூடாது என்று கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

தர்மபுரி

முட்டை தினம்

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தர்மபுரி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

உலக முட்டை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2-வது வெள்ளிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. முட்டைகளில் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. பண்ணைகளில் முட்டைகள் உற்பத்தி ஆவது முதல் நுகர்வோர் சாப்பிடுவது வரை சுகாதாரம் முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

வேகவைத்து...

நாள்பட்ட முட்டைகள் கெட்டு போக வாய்ப்பு உள்ளது. இதனால் முட்டைகளை சோதனை செய்த பின்னரே சாப்பிட வேண்டும். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின்படி முட்டையை முழுமையாக வேக வைத்து உடனடியாக சாப்பிட வேண்டும்.

வேக வைக்காத முட்டைகளை சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வேக வைக்காமல் முட்டைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story