ஐன்ஸ்டீன் கல்லூரி ஆண்டு விழா


ஐன்ஸ்டீன் கல்லூரி ஆண்டு விழா
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் ஐன்ஸ்டீன் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.

தென்காசி

ஆலங்குளம்:

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 144-வது பிறந்த நாள், ஐன்ஸ்டீன் கல்லூரி ஆண்டு விழாவாக கொண்டாடப்பட்டது. ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இல்ல சந்தன குமார பாண்டியன் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் மதிவாணன், கல்லூரியின் தலைவர் பேராசிரியர் அமுதவாணன், கல்லூரியின் செயலர் பேராசிரியர் எழில்வாணன் ஆகியோர் தலைமை தாங்கினர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் வேலாயுதம், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிஸ்ப்ளோ சாப்ட்வேர் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் சம்பந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணா அரங்கத்தில் மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் "ட்ரீம்டா" ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

கவுரவ விருந்தினராக அமெரிக்காவில் உள்ள வணிகம் மற்றும் கட்டிட கலை கல்லூரியை சேர்ந்த ஆர்தர் ரமேஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நான்கு ஆண்டுகளிலும் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் சிறந்து விளங்கிய பொறியியல் கல்லூரி இறுதிஆண்டு பயிலும் மாணவி தீபா, மற்றும் மாணவன் ஹரிஹரசுதன், 3 ஆண்டுகளிலும் மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வில் சிறந்த விளங்கிய கலைக்கல்லூரியில் பயிலும் மாணவி சுமித்ரா, மற்றும் சந்தியா ஆகியோருக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முடிவில் இரண்டாம் ஆண்டு கணிப்பொறியியல் துறை மாணவி மகேஸ்வரி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கட்டிடவியல் துறை தலைவர் குளோரி செல்வ மனோ, கணினி அறிவியல் துறை தலைவர் செண்பக பிரியா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story