கவுரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் விவரங்களை பதிவு செய்யலாம்


கவுரவ நிதி திட்டத்தில்  விவசாயிகள் விவரங்களை பதிவு செய்யலாம்
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கவுரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் விவரங்களை பதிவு செய்ய வருகிற 15-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

கவுரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் விவரங்களை பதிவு செய்ய வருகிற 15-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கவுரவ நிதி உதவி திட்டம்

தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் கிசான் திட்டம் எனப்படும் கவுரவ நிதி திட்டமானது கடந்த 1.12.2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு விவசாய குடும்பத்திற்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் தொகையை 3 தவணைகளாக வழங்கி வருகின்றது. இதுவரை இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 12 தவணை தொகை வரப்பெற்றுள்ளது. தற்போது விவசாயிகள் 13-வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது விவரங்களை (இ- கே.ஒய்.சி.) பதிவு செய்வது அவசியமாகும்.

கடைசி நாள்

அவ்வாறு பதிவு செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களுடைய ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி. மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.

இதுவரை விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகள் வருகிற 15-ந் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) அருகிலுள்ள இ-சேவை மையங்கள், இ-தபால் நிலையங்களை அணுகி தகுந்த விவரங்களை சமர்ப்பித்து பதிவு செய்து இத்திட்டத்தில் பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story