பெரியகுளம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை


பெரியகுளம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
x

பெரியகுளம் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தேனி

பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த லோகநாதன் விஷத்தை குடித்தார்.

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story