போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் முதியவர் உடல் எரிப்பு; மகன் மீது வழக்கு


போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் முதியவர் உடல் எரிப்பு; மகன் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 May 2023 2:30 AM IST (Updated: 27 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் முதியவர் உடலை எரித்ததாக மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி

போடி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்தார். இதில், மயங்கி விழுந்த பழனிசாமியை, அவரது மகன் சுரேஷ் (40) மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பழனிசாமி உயிரிழந்தார்.

இதையடுத்து சுரேஷ், தனது தந்தையின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் நேரடியாக ராமகிருஷ்ணாபுரம் மயானத்திற்கு கொண்டு சென்றார். மேலும் இதுகுறித்து போலீசாருக்கும் அவர் தகவல் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே உறவினர்களுடன் சேர்ந்து சுரேஷ், தனது தந்தை பழனிசாமியின் உடலை எரித்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொட்டிபுரம் கிராம நிர்வாக அலுவலர் பால்பாண்டி, போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் முதியவர் உடலை எரித்ததாக சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story