மூதாட்டி உடல் மீட்பு; போலீசார் விசாரணை


மூதாட்டி உடல் மீட்பு; போலீசார் விசாரணை
x

மூதாட்டி உடல் மீட்பு; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்து புனித செபஸ்தியாரை வழிபட்டனர். திருவிழாவிற்காக சிறப்பு பஸ்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த கீற்று கொட்டகையில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டி உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்?, மூதாட்டி வயது முதிர்வின் காரணமாக இறந்தாரா? அல்லது அதிக வெயில் தாக்கத்தினால் இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story