திராவகம் குடித்து முதியவர் தற்கொலை
திருவட்டார் அருகே திராவகம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே திராவகம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டாரை அடுத்த வீயன்னூர் வாழவிளாகத்து விளையை சேர்ந்தவர் தங்கமணி (வயது 71). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ரேவதி (62). இவர்களுக்கு 2 மகளும், 2 மகனும் உண்டு. 4 பேருக்கும் திருமணமாகி விட்டது. தங்கமணி கடந்த 10 ஆண்டுகளாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனவருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பெட்டிக்கடையில் வைத்து தங்கமணி திராவகம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரேவதி அளித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.