விஷம் குடித்து முதியவர் தற்கொலை
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் விஷம் குடித்து மயங்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு.
திண்டுக்கல்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் நேற்று முன்தினம் மாலை ஒரு முதியவர் மயங்கி கிடந்தார். இதுபற்றி அறிந்த ரெயில்வே போலீசார், அங்கு சென்று முதியவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த போது அவர் விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தூத்துக்குடி சோழபுரத்தை சேர்ந்த மைக்கேல் (வயது 71) என்பது தெரியவந்தது. திருச்சியில் இருக்கும் அவருடைய மகனை பார்த்து விட்டு திரும்பிய அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story