விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x

விருதுநகர் அருகே மகளிடம் தகவல் தெரிவித்து விட்டு விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த இவர் எனக்கு வாழ பிடிக்கவில்லை சாகப்போகிறேன் என விருதுநகரில் உள்ள தனது மகளுக்கு போன் மூலம் தகவல் சொல்லிவிட்டு வில்லிபத்திரி பஞ்சாயத்து அலுவலகம் அருகே விஷத்தை குடித்து மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இவரது குடும்பத்தினர் அவரை தேடி கண்டுபிடித்து தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மகன் இருளப்பன் (33) கொடுத்த புகாரின் பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Next Story