விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x

கம்மாபுரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

கடலூர்

கம்மாபுரம்

கம்மாபுரம் அருகே சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 73). கடந்த சில மாதங்களாக கண் வலியால் அவதியுற்று வந்த இவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் கண் வலி ஏற்பட்டதால் மனமுடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறமுகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story