விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே மாங்குடியை சேர்ந்தவர் ராமராசு (வயது 70). இவருக்கு தொடர்ந்து வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும் வயிற்று வலி குணமாகவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமராசு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story