முதியவர் தற்கொலை
விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
நெய்குப்பை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோலைமுத்து(வயது 80). இவர் அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த 3 நாட்களாக தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சோலைமுத்து நேற்று காலை அரளி விதையை (விஷம்) அரைத்து தின்றார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சோலைமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire