விஷம் குடித்து முதியவர் தற்கொலை
பண்ருட்டி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால்(வயது 70). இவர் கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த வேணுகோபால் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story