விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 70). இவருக்கு நீண்ட நாட்களாக சர்க்கரை நோய் இருந்து வந்தது. இதன் காரணமாக இவரது காலில் இருந்த 4 விரல்கள் வெட்டி அகற்றப்பட்டது. இதில் மனவேதனை அடைந்த கோவிந்தன் நேற்று காலை விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோவிந்தன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story