மாத்திரைகளை மதுவில் கலந்து குடித்து முதியவர் தற்கொலை


மாத்திரைகளை மதுவில் கலந்து குடித்து முதியவர் தற்கொலை
x

மாத்திரைகளை மதுவில் கலந்து குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

திருச்சி சின்ன சவுக் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமதுஅல்லாபக்ஸ்கான் (வயது 60). சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த இவர், ரத்த அழுத்த நோய்க்கு சாப்பிடும் 15 மாத்திரைகளை மதுவில் கலந்து குடித்துவிட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சமயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story