விஷம்குடித்து முதியவர் தற்கொலை
விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் தர்மர் (வயது 70). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் இவர் திடீரென வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story