வேன் மோதி முதியவர் சாவு


வேன் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலாடி அருகே வேன் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

கடலாடி அருகே ஓரிவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பசாமி (வயது 48) சோமசுந்தரம் (62). இவர்கள் இருவரும் தை அமாவாசையை முன்னிட்டு மாரியூர் கடற்கரைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பும் போது, மேலச்செல்வனூர் கிராமம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டனர். பின்னர் அங்கிருந்து சாயல்குடி நோக்கி திரும்பும் ேபாது, ராமேசுவரத்தில் இருந்து சாயல்குடி நோக்கி பின்னால் வந்த வேன் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு சென்ற வழியில் சோமசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் கடலாடி இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்லச்சாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக ராமேசுவரத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Related Tags :
Next Story