கார்கள் நேருக்கு நேர் மோதியதில் முதியவர் பலி; 11 பேர் படுகாயம்


கார்கள் நேருக்கு நேர் மோதியதில் முதியவர் பலி; 11 பேர் படுகாயம்
x

நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு ேநர் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் பலியானார். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்


நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு ேநர் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் பலியானார். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

மகன் குடும்பத்தினரை வழியனுப்ப...

கர்நாடக மாநிலம் மடிவாளா பி.டி.எம். பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 92). இவரது மகன் முரளி நரசிம்மன் (58), இவருடைய மனைவி சவிதா (56). இவர்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முரளிநரசிம்மன் குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் அவர் குடும்பத்தினருடன் மீண்டும் அமெரிக்கா புறப்பட்டார். இதற்காக பெங்களூருவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு காரில் சென்றார். அவர்களை வழியனுப்பி வைக்க நரசிம்மன், இவரது மனைவி அலமேலு (84) ஆகியோரும் சென்றனர்.

டயர் வெடித்து விபத்து

காரில் முரளி நரசிம்மன், சவிதா, சச்சின் (19) உள்பட 6 பேர் சென்றனர். காரை பெங்களூரு பன்சங்கரி பகுதியை சேர்ந்த மகேஷ் (33) ஓட்டிச் சென்றார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சண்டியூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரின் முன்பக்க டயர் வெடித்தது.

இதில் கார் நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி, எதிர் திசையில் ஆம்பூர் பகுதியில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி வந்த நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த ராணுவவீரர் தென்னரசு (41) மற்றும் அவரது குடும்பத்தினர் வந்த காருடன் மோதியது.

முதியவர் பலி

இதில் நரசிம்மன் சம்பவ இடத்திலேயே பலியானார். ராணுவ வீரர் உள்பட இரண்டு கார்களிலும் பயணம் செய்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Next Story