மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் படுகாயம்
கழுகுமலை அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலையில் இருந்து தேவர்குளம் செல்லும் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு சி.ஆர்.காலனியை சேர்ந்த தேவசகாயம் (வயது 68) மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை ராஜ் என்பவரின் தோட்டத்திற்கு அருகில் சாலையோரமாக நிறுத்தி விட்டு நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் கழுகுமலை அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த தனுஷ் மகன் மாடசாமி(32) வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் அருகில் நின்று கொண்டிருந்த தேவசகாயம் மீது மோதியதில், அவர் படுகாயம் அடைந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாடசாமியும் காயமடைந்தார். இது குறித்து கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story