அரசு பஸ் மோதி முதியவர் பலி
அரசு பஸ் மோதி முதியவர் பலியானார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் எம்.ஆர்.நகரை சேர்ந்தவர் சேதுராஜ் (வயது 60). இவருடைய தம்பி மாரியப்பன். இவர்கள் 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையத்தில் இருந்து மதுரை சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அரசு பஸ் இவர்கள் மீது மோதியதில் சேதுராஜ் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire