மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
x

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே பிசானதூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 96). இவர், சைக்கிளில் கந்தர்வகோட்டை கடைவீதிக்கு வந்துவிட்டு திரும்பி சென்று கொண்டிருந்தார். தஞ்சாவூர்-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, தெத்துவாசல் பட்டியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், கோவிந்தராஜ் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த கோவிந்தராஜ் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story