ரெயில் மோதி முதியவர் பலி


ரெயில் மோதி முதியவர் பலி
x

குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

காட்பாடியை அடுத்த தென்னங்குப்பம் விளையாடபுரம் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 70). இவர், குடியாத்தம்-காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு சொக்கலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story