திராவகம் குடித்து மூதாட்டி தற்கொலை
மேக்காமண்டபம் அருகே திராவகம் குடித்து மூதாட்டி தற்கொலை
கன்னியாகுமரி
திருவட்டார்:
மேக்காமண்டபம் அருகே திராவகம் குடித்து மூதாட்டி தற்கொலை
மேக்காமண்டபத்தை அடுத்த பிலாங் காலையில் முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. இந்த முதியோர் இல்லத்தில் உறவினர்கள் யாரும் இல்லாத மரியா (68) என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். இதய நோயால் பாதிப்படைந்த இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர் ரப்பர் ஷீட் உறைய பயன்படுத்தும் திராவகத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு பூவன்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story