விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை


விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
x

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் சம்மந்தபுரம் குட்டூரணி தெருவை சேர்ந்த ராமலட்சுமி (வயது 60) என்பவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென காபியில் குருணை மருந்து கலந்து குடித்து விட்டதாக ராமலட்சுமி மகள் மாரீஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவரை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில். அங்கு சிகிச்சை பலனின்றி ராமலட்சுமி இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story