விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை


விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:15:08+05:30)

நிலக்கோட்டை அருகே விஷம் குடித்து மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள குல்லிசெட்டிபட்டியை சேர்ந்த ஓச்சப்பன் மனைவி முத்துப்பிள்ளை (வயது 83). கடந்த சில ஆண்டுகளாக இவர் வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த முத்துப்பிள்ளை நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story