வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம்; சிறப்பு பார்வையாளர் சிவசண்முகராஜா தலைமையில் நடந்தது
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் சிவசண்முகராஜா தலைமையில் நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் சிவசண்முகராஜா தலைமையில் நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளரும், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவருமான எஸ்.சிவசண்முகராஜா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1.1.2023 அன்று தகுதி ஏற்படுத்தும் நாளாகக்கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன் பேரில் ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 222 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 951 வாக்குசாவடி அமைவிடங்கள் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் அனைத்து வேலைநாட்களிலும் வருகிற டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை பொதுமக்களிடம் இருந்து படிவங்கள் பெறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இணையதளம்
மேலும் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும், voter helpline என்ற செயலிகள் மூலமாகவும் வாக்காளர் சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து தகுதியான வாக்காளர்கள், படிவங்களை பூர்த்திசெய்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார். முன்னதாக அவர், ஈரோடு இடையன்காட்டுவலசு மாநகராட்சி அரசு உயர்நிலை பள்ளிக்கூடத்திலும், ஆசிரியர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்திலும் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் தெடர்பாக ஆய்வுசெய்தார். இதில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அதிகாரி ச.சந்தோஷினி சந்திரா, பயிற்சி கலெக்டர் பொன்மணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.