1,485 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம்-இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு


1,485 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம்-இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 1,485 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான இளம் வாக்காளர்கள் கலந்து கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்தனர்.

சிறப்பு முகாம்கள்

இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2023 தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிட்டது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் 878 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள மொத்தம் 1,485 வாக்குச்சாவடிகளிலும் நேற்று வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றதன. தகுதியான நபர்கள் ஏராளமானோர் அருகில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று, தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-யை பூர்த்தி செய்து கொடுத்தனர். மேலும் ஏராளமான இளம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்தனர்.

ஆதார் எண்

ஏற்கனவே வாக்காளராக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் அல்லது வேறு தொகுதிக்கு மாற்றம் செய்ய விரும்பியவர்கள் அதற்கான படிவம் 8-யை பூர்த்தி செய்து கொடுத்தனர். மேலும் ஏராளமான வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட படிவம் 6பி-யை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கினார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,485 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

இந்தநிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் வருவாய்த் துறையை சேர்ந்த மாவட்ட அதிகாரிகள், தாசில்தார்கள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story