தேர்தல் விழிப்புணர்வு போட்டி; வெற்றிபெற்ற இளைஞர்களுக்கு பரிசு


தேர்தல் விழிப்புணர்வு போட்டி; வெற்றிபெற்ற இளைஞர்களுக்கு பரிசு
x

வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான போட்டிகளில், பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.

தேர்தல் நடைமுறையில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் விதமாக கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, சுவரொட்டி தயாரித்தல், நடனப் போட்டி, குறுஞ்செய்தி வினாடி- வினா போட்டி, பாட்டுப்போட்டி, வாசகம் எழுதுதல் மற்றும் இணையவழி வினாடி- வினா போட்டி போன்ற பல்வேறு வகையான போட்டிகள் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தால் நடத்தப்பட்டது.

வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான போட்டிகளில், பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் கமிஷனர் அனுப் சந்திர பாண்டே தலைமை தாங்கி பரிசு-சான்றிதழ்களை வழங்கினார்.

2022-ம் ஆண்டுக்கான வாக்காளர் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டல் தொடர்பாக நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்றவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தும் விதமாக புகைப்பட கண்காட்சியும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story