வெங்கடரமண சாமி கோவில் தேர்த்திருவிழா
மதகொண்டப்பள்ளியில் வெங்கடரமண சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை
தளி அருகே மதகொண்டப்பள்ளியில் வெங்கடரமண சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமியை கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏற்றினர். இதில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தொழில் அதிபர் வேணுகோபால் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து கோவிலை சுற்றி வந்து நிலை நிறுத்தினர். அப்போது பக்தர்கள் உப்பு, வாழைப்பழம் ஆகியவற்றை தேர் மீது வீசி வழிபட்டனர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் வழங்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story