உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்
உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் நடைபெறுகிறது
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.அதன்படி 498 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும் என மொத்தம் 510 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் நடைபெறுகிறது .வேட்பு மனுக்கள் பெற கடைசி நாள் 27ம் தேதி மாலை 5 மணி ஆகும். வேட்பு மனு பரிசீலனை 28ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். 30ம் தேதி மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.அதனை தொடர்ந்து ஜூலை 9-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 12-ந்தேதி நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story