நிலையூர் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்


நிலையூர் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்
x

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில் கடும் போட்டி நிலவியதால் ஓட்டெடுப்பு மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில் கடும் போட்டி நிலவியதால் ஓட்டெடுப்பு மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவர் பதவிக்கு கடும் போட்டி

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாய் அமைந்துள்ளது. பெரியாறு வைகை வடிநிலக்கோட்டத்தை சேர்ந்த இந்த கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நிலையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கோட்டூர்சாமி, திருப்பரங்குன்றம் தாலுகா தாசில்தார் பார்த்திபன், பொதுப்பணி துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் ராஜேஷ் ஆகியோர் தேர்தலை நடத்தினார்கள். தலைவர் பதவிக்கு பல்புசின்னத்தில் ரமேசும், வில் அம்பு சின்னத்தில் பாண்டியும் போட்டியிட்டனர்.

ஓட்டுப்பதிவு

இவர்களிடையே கடும் போட்டி நிலவியதால் ஓட்டுபதிவு நடந்தது.மொத்தம் 722 ஓட்டில் 209 ஓட்டு பதிவானது. அதில் 109 ஓட்டு பெற்று ரமேஷ் வெற்றி பெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட பாண்டி 94 வாக்குபெற்றார். 6 ஓட்டு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதேபோல கண்மாயின் ஆட்சி மண்டல தொகுதி எண்-1 உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வெற்றிவேல், எண் - 2 உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அய்யங்காளை, எண்-4 உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் செல்வம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதே சமயம் எண் - 3 உறுப்பினர் பதவிக்கு கண்ணப்பன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்

பெருங்குடி கண்மாய்

இதற்கிடையே பெருங்குடி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தில் தலைவர் மற்றும் 4 உறுப்பினர் பதவி இருந்தபோதிலும் எண் -4 க்கான உறுப்பினர் பதவிக்கு போட்டி நிலவியது. மொத்தம் 109 ஓட்டில் 19 ஓட்டு மட்டுமே பதிவானது.

அதில் 17 ஒட்டு பெற்று அய்யணன் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட குமார் 2 ஓட்டு பெற்றார்.இதே கண்மாயின் சங்க தலைவர் தேர்தலில் போட்டியின்றி பெரிய கருப்பு ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்

எண்-1 ன்உறுப்பினராக ராஜ்குமார், எண்-2 ன் உறுப்பினராக கிருஷ்ணன், எண் 3-ன் உறுப்பினராக மகராஜன் ஆகியோர் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கோட்டூர் சாமி தெரிவித்தார்.


Next Story