நந்தியாறு-கூழையாறு உபவடிநில பகுதிகளுக்கு தேர்தல்: வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
நந்தியாறு-கூழையாறு உபவடிநில பகுதிகளுக்கு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நந்தியாறு-கூழையாறு உபவடிநில பகுதிகளுக்கு மொத்தம் 18 சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 26-ந் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைதொடர்ந்து கடந்த 8-ந் தேதி வேட்புமனுக்கள் வினியோகம் செய்யப்பட்டன. 11-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதில், தலைவர் பதவிக்கு 18 பேரும், உறுப்பினர் பதவிகளுக்கு 100 பேரும் போட்டியிட்டனர். இதையடுத்து தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
Related Tags :
Next Story