வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 75,824 விண்ணப்பங்கள்


வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய  75,824 விண்ணப்பங்கள்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 75,824 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று அதிகாரி ஷோபனா தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 75,824 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று அதிகாரி ஷோபனா தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் ஆணையத்தால் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் ஷோபனா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாமில் பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், களப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு நவம்பர் 9-ந் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 8-ந் தேதி வரை 1,880 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடந்தது. இந்த சுருக்கமுறை திருத்தத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக மொத்தம் 75,௮௨௪ விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியல்

அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிற 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மேலும், பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு, பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா, உதவி கலெக்டர் சதீஸ்குமார், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ஜெய்சங்கர் மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் கலந்துகொண்டனர்.


Next Story