வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பயிற்சி அளித்தல் ஆய்வு கூட்டம்


வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பயிற்சி அளித்தல் ஆய்வு கூட்டம்
x

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பயிற்சி அளித்தல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தொடர்பான பயிற்சியளித்தல் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் கவிதா, வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் ஹிர்தேஷ்குமார் கலந்து கொண்டு பேசுகையில், வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாத வண்ணம் பெயர்களை சேர்த்தல் குறித்து பயிற்சியளித்தல் வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம், பெயர் நீக்குதல் மற்றும் தொகுதிக்குள் முகவரி மாற்றம், இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வது குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், தேர்தல்பிரிவு தாசில்தார் சரவணன், வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story