வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
x

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

நாகப்பட்டினம்

தமிழகத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட 2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் இந்த மாதம் வெளியிடப்பட்டது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடந்து வருகிறது. அதன்படி திட்டச்சேரி அரசு ஆரம்பப்பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை தனி துணை கலெக்டர் ராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் உற்சாகமாக வந்து புதிய வாக்காளர்களாக தங்களை சேர்க்க விண்ணப்பித்தனர். ஆய்வின் போது திட்டச்சேரி கிராம நிர்வாக அலுவலர் குமரேசன், தி.மு.க. நகர செயலாளர் முகமது சுல்தான், அ.தி.மு.க. நகர செயலாளர் அப்துல் பாசித் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story