மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x

ஒரத்தநாட்டில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் இன்று ( வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில் ஒரத்தநாடு, ஊரணிபுரம், திருவோணம், வடசேரி, பாப்பாநாடு, உறந்தைராயன்குடிக்காடு, ஒக்கநாடுகீழையூர், பின்னையூர், பொய்யுண்டார் கோட்டை, கண்ணுகுடி மேற்கு, மேலஉளூர், சாலியமங்கலம், மாரியம்மன்கோவில், அம்மாப்பேட்டை, சூரக்கோட்டை மற்றும் பனையக்கோட்டை ஆகிய மின்சார பிரிவு அலுவலகங்களை சோ்ந்த மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை ஒரத்தநாடு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) எம். மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story