மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
கும்பகோணத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
தஞ்சாவூர்
கும்பகோணம்;
கும்பகோணம் கோட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. கூட்டத்துக்கு, மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை தாங்கினார்.கூட்டத்தில் கும்பகோணம் நகரம், கும்பகோணம் புறநகர், பாபநாசம் நகர், புறநகர், கபிஸ்தலம், அய்யம்பேட்டை நகர், புறநகர், திருக்கருக்காவூர், கணபதிஅக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் பிரிவு அலுவலகம் பகுதியினைச் சார்ந்த மின் நுகர்வோர் கலந்து கொண்டு மின்வினியோகம் தொடர்பாக குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் கோட்டம் செயற் பொறியாளர் திருவேங்கடம் தெரிவித்து உள்ளார
Related Tags :
Next Story