நீச்சல் குளத்தை சுற்றி ரூ.1 லட்சத்தில் மின்விளக்கு வசதி


நீச்சல் குளத்தை சுற்றி ரூ.1 லட்சத்தில் மின்விளக்கு வசதி
x

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்களம் குளிக்க அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தை சுற்றி ரூ.1 லட்சத்தில் மின்விளக்கு வசதி அமைக்கும் பணி தொடங்கி உள்ளது,

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்களம் குளிக்க அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தை சுற்றி ரூ.1 லட்சத்தில் மின்விளக்கு வசதி அமைக்கும் பணி தொடங்கி உள்ளது,

நீச்சல் குளம்

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 1982-ம் ஆண்டு காஞ்சி மகாபெரியவர், மங்களம் என்ற யானையை வழங்கினார். தற்போது இந்த யானைக்கு 55 வயதாகிறது. யானை மங்களத்துக்கு சளி தொந்தரவு இருப்பதால் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்காமல், முகாமில் வழங்கும் உணவு, மூலிகைகள், உடற்ப யிற்சிகள் கோவிலிலேயே வழங்கப்பட்டு வருகிறது. மங்களம் யானை வெளியில் எங்கும் செல்லாததால், ஆனந்தமாக இருப்பதற்காகவும், குளத்தில் நீராடுவதற்கு வசதியாக கோவில் நந்தவனப்பகுதியான தென்கிழக்கு பகுதியில் நீச்சல் குளம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

மின் விளக்கு வசதி

இதன்படி ரூ.8 லட்சத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு பாதுகாப்பான இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. யானை மங்களம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வசதியாக நீச்சல் குளத்தை சுற்றிலும் 14 நவீன மின் விளக்குகள் ரூ.1 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. நீச்சல் குளத்தை சுற்றிலும் சுவர்களில் வண்ணங்கள் தீட்டப்படுகிறது. பணிகள் நிறைவு பெற்றதும் மங்களம் யானை நீச்சல்குளத்தில் தினமும் ஆனந்தமாக குளித்து மகிழ அனுமதிக்கப்படலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story