தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள்


தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள்
x

தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை ரூ.300 கோடியில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டு உள்ளது. திருப்பத்தூர் டவுன் பகுதியில் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மின்விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பேட்டை சாலை வரை இருபுறமும் மின்விளக்குகள் அமைக்க திருவண்ணாமலை தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்.பி. ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி இருந்தார். அதைத்தொடர்ந்து இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது.

இந்த மின் விளக்குகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் இ.முரளி வரவேற்றார். நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட மின்விளக்குகளை சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி ஆகியோர் தொடங்கி வைத்து பேசினார்கள்.

நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் டி.ஆர்.ரகுநாதன், கே.பி.ஆர்.ஜோதிராஜன், பி.சந்திரசேகர், வி.வடிவேல், துணைத்தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா, நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. கூறுகையில், முதற்கட்டமாக திருப்பத்தூர் டவுன் பகுதியில் சாலையின் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து திருப்பத்தூர் நகராட்சி எல்லையில் இருந்து சேலம் எல்லை வரை இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது என்றார்.


Next Story