தாட்கோ மூலம் மானியத்தில் மின் மோட்டார், குழாய்கள்


தாட்கோ மூலம் மானியத்தில் மின் மோட்டார், குழாய்கள்
x

தாட்கோ மூலம் மானியத்தில் மின் மோட்டார், குழாய்கள் பெற ஆதிதிராவிடர்- பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்


தாட்கோ மூலம் மானியத்தில் மின் மோட்டார், குழாய்கள் பெற ஆதிதிராவிடர்- பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மானியம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு நீர்ப்பாசனத்திற்காக பி.வி.சி. குழாய்கள் வாங்க ஒரு விவசாயிக்கு ரூ.15 ஆயிரமும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு நில மேம்பாட்டிற்காக புதிய மின் மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதிலாக புதிய மின் மோட்டார் வாங்க ஒரு விவசாயிக்கு ரூ.10 ஆயிரமும் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com தாட்கோ இணைய தளம் விண்ணப்பித்து மானியம் பெறலாம்.

விவரங்கள் அறிய...

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை 04365-250305 என்ற தொலைபேசி எண்ணிலும், தாட்கோ மாவட்ட மேலாளரை 9445029466 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story