எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசம்


எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசம்
x

எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசமடைந்தது

மயிலாடுதுறை

சீர்காழியில் உள்ள ஒரு ஷோரூமில் பொதுமக்கள் பார்வைக்காக ஒரு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அந்த மோட்டார் சைக்கிளை வெளியே இழுத்து வந்து போட்டனர். பின்னர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் தண்ணீர் மற்றும் மணலை அள்ளிப்போட்டு தீயை அணைத்தனர். இதில், இந்த மோட்டார் சைக்கிள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமடைந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story