சரக்கு வேன் மோதி மின் கம்பம் உடைந்தது
தேன்கனிக்கோட்டையில் சரக்கு வேன் மோதி மின் கம்பம் உடைந்தது.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை பைபாஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு மினி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இதில் டிரைவர் மற்றும் 2 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்பட 5 பேர் வந்தனர். இந்த வேன் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. வேன் மோதியதால் மின் கம்பம் உடைந்து கம்பிகள் உரசியதால் தீப்பொறி ஏற்பட்டது. இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து வேனில் இருந்த 4 பேரையும் மீட்டனர். சிறுமிகளிடம் விசாரணை நடத்தியபோது கொடகாரெட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கோவிலுக்கு சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். மின்கம்பம் உடைந்ததால் மின்சாரம் இல்லாமல் நகரே இருளில் மூழ்கியது. இதனிடையே நேற்று மின்வாரிய ஊழியர்கள் வேறு கம்பம் நட்டு மின் இணைப்பு வழங்கினர்.